×

வன்னியர்களுக்கு திமுக செய்த சாதனைகளை மறைத்து ராமதாஸ் சுயநலத்துக்காக பிரச்சாரம் செய்கிறார்!: மு.க.ஸ்டாலின்

சென்னை: வன்னியர்களுக்கு திமுக செய்த சாதனைகளை மறைத்து ராமதாஸ் சுயநலத்துக்காக பிரச்சாரம் செய்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் தான் வன்னியர் சமுதாயம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடும் திமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு கேட்டு போராடி உயிர்நீத்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியும், உதவி தொகையும் அளித்தது திமுக ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags : campaigns ,DMK ,Vanni ,MK Stalin , Vanniyar, DMK, Ramadas, Campaign, MK Stalin
× RELATED சாலை விபத்தில் படுகாயமடைந்த திருமழிசை திமுக பேரூராட்சி தலைவர் காலமானார்